×

‘இது வரை நடித்த படம் மாதிரி இது இருக்காது’ – ‘லியோ’ குறித்த சுவாரசியமான தகவலை பகிர்ந்த 'த்ரிஷா'.

 

‘லியோ படம் இது வரை நானும் விஜய்யும் நடித்த படம் மாதிரி இருக்காது’ என நடிகை த்ரிஷா படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

பிரபல விருது விழாவில் நடிகை த்ரிஷாவிற்கு கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் ராங்கி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வழங்கினார்.  விருதை பெற்ற த்ரிஷாவிடம் ‘ லியோ படத்தின் கிளைமாக்ஸ் வரைக்கும் இருப்பீங்களா?’ என்ற கேள்வியை தொகுப்பாளர் எழுப்ப, சிரித்துக்கொண்டே இருக்குநர் இங்கதான்  இருக்கார் அவரிடமே கேளுங்க என கூறினார்.

தொடர்ந்து பேசிய த்ரிஷா, இதுவரை  நானும் விஜய்யும் நான்கு படங்களில் நடித்திருக்கிறோம், மீண்டும் எப்போது ஒன்று சேர்வீர்கள் என பலரும் கேட்டனர் எங்கலை மீண்டு இணைத்த லோகேஷ்க்கு நன்றி. இது வரை நாங்கல் நடித்த படம் மாதிரி லியோ இருக்காது. கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அதே சமயம் எங்க கெமிஸ்ட்ரி மாறாமல் அப்படியே இருக்கும்” என படம் குறித்து பகிர்ந்துகொண்டார் த்ரிஷா.