×

குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்த இரண்டு முன்னணி நடிகர்கள்..!

 

ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்துடன் கைகோர்த்தார். இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் இதில் கலந்துகொள்ளவில்லை. அவர் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தினால், அதனை முடித்துவிட்டு தான் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். அஜித் இல்லாத மற்ற நடிகர்களின் காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்திருந்தார்.மேலும் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய திரைப்படமான மார்க் ஆண்டனியில் முக்கிய ரோலில் நடித்திருந்த தெலுங்கு நடிகர் சுனில், குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். சுனில் மற்றும் நட்டி இருவருக்கும் இடையிலான காட்சிகள் தான் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது என மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.