×

விஜய்யின் GOAT  படத்துடன் மோதும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள்...? 

 

தளபதி விஜய் - இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், GOAT படம் வெளிவரவிருக்கும் அதே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் வெளிவரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்த இரண்டு படங்களும் பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் தடுமாறி கொண்டு இருக்கிறது.

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜ ராஜா திரைப்படமும், சந்தானம் நடிப்பில் ஆனந்தி பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் திரைப்படமும் தான் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களும் அதே நாளில் வெளியாகும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை.