×

விடாமுயற்சி படத்திற்கு யு/ஏ சான்று... 

 


நடிகர் அஜித் குமார் நடித்து வெளியாகவுள்ள விடாமுயற்சி படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கியுள்ளது. 

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

<a href=https://youtube.com/embed/hsoGpoDxyKg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/hsoGpoDxyKg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், விடாமுயற்சி டிரெய்லரின் பி.டி.எஸ். வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.