×

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி!

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது. தயாரிப்பாளராக சினிமாவில் நுழைந்த உதயநிதி, பின்னர் 2012-ல் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்திற்குக் கிடைத்த அமோக வரவேற்பு உதயநிதியை மேலும் பல படங்கள் நடிக்கச் செய்தது. அவர் தற்போது தன்னை ஒரு நல்ல நடிகராக மெருகேற்றிக் கொண்டார். தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில்
 

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது.

தயாரிப்பாளராக சினிமாவில் நுழைந்த உதயநிதி, பின்னர் 2012-ல் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்திற்குக் கிடைத்த அமோக வரவேற்பு உதயநிதியை மேலும் பல படங்கள் நடிக்கச் செய்தது.

அவர் தற்போது தன்னை ஒரு நல்ல நடிகராக மெருகேற்றிக் கொண்டார். தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மகிழ்திருமேனி கூறிய கதை உதயநிதிக்கு பிடித்துப் போக உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணி நீண்ட நாட்களுக்கு முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படம் தாமதமாகிவிட்டது.

கடந்த ஆண்டு மகிழ்திருமேனி இயக்கிய ‘தடம்’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அதையடுத்து தற்போது மகிழ் க்ரைம் திரில்லர் கதைக்காக உதயநிதியுடன் கைகோர்க்க உள்ளார். இப்படம் நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது.