×

வடிவேலுவுடன் வித்தியாசமான தோற்றத்தில் உதயநிதி.. ‘மாமன்னன்’ புதிய போஸ்டர் வெளியீடு !

 

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் பிரத்யேக போஸ்டர் வெளியாகியுள்ளது. 

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ‘

உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வடிவேலுவுடன் வித்தியாசமான தோற்றத்தில் உதயநிதி இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.