×

அட்டகாசமாக வெளியாகும் 'மாமன்னன்' ஃப்ர்ஸ்ட் சிங்கிள்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

 

 உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள அந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  ‌