×

‘மாமன்னன்’ அடுத்த பாடல் எப்போது ?.. ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த செம்ம அப்டேட் !

 

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி கூட்டணியில் உருவாகியுள்ளது ‘மாமன்னன்’ திரைப்படம். அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளது. ,

இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடிய முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடல் குறித்து புதிய அறிவிப்பை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அதன்படி இரண்டாவது பாடல் வரும் மே 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.