உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
Sep 14, 2023, 17:40 IST
உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
உமாபதி ராமையா நடித்துள்ள பித்தல மாத்தி திரைப்படம் வரும் செப்டம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இதில் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதி ராமையா நடித்துள்ளார். இவர், ஏற்கனவே, திருமணம் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். பித்தல மாத்தி திரைப்படத்தில் உமாபதி ராமையாவுடன் இணைந்து, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் ஆகிய பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.