ஹீரோவாக மாறும் மத்திய இணையமைச்சர் மகன்..!
Jul 6, 2024, 11:00 IST
தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் சினிமாவிற்குள் முன்னணியாக இருக்கும் பிரபலங்கள் , அரசியலவாதிகள் , கோடீஸ்வரர்களின் வாரிசுகள் இலகுவாக நுழைகின்றனர். அவ்வாறே சமீபத்தில் ஒரு மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகிறார் சுரேஷ் கோபி மகன் .
சுரேஷ் கோபி என்பவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பா.ஜ.க கட்சியில் இணைந்து மத்திய இணையமைச்சராகவும் காணப்டுகின்றார்.
இந்த நிலையிலேயே மத்திய இணையமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி மகன் கோகுல் சுரேஷ் நடித்து, அருண் சந்து இயக்கிய "Gaganachari" என்ற மலையாள திரைப்படம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகியுள்ளது.