×

இடஒதுக்கீடு குறித்து சர்சை பேச்சு.. பின் வாங்கிய ‘வாத்தி’ இயக்குனர் !

 

இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சை பேச்சுக்கு ‘வாத்தி’ படத்தின் இயக்குனர் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாத்தி’. கல்வி வணிகமயமாதல் குறித்து வலுமையான கருத்துக்களை வைத்துள்ள இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 8 நாளில் 75 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் வெங்கி அட்லூரி, ஒருவேளை நான் கல்வி அமைச்சரானால் சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை கொண்டு வருவேன் என்று கூறினார். வெங்கி அட்லூரியின் இந்த பேச்சு தமிழத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ‘வாத்தி’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட பின்னர் பேசிய இயக்குனர் வெங்கி அட்லூரி, எனது பார்வையில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி செல்லவேண்டும். தென்னிந்திய பள்ளி மீது எனக்கு ஆர்வம் உண்டு. தமிழ்நாடு பற்றி எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு சூழல் குறித்தும் எனக்கு தெரியாது. 

நான் ஏற்கனவே சொன்ன கருத்து ஒன்று சச்சையாகியுள்ளது. அதனால் அது குறித்து அதிகம் பேசவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை கருத்தில் கொள்ளவேண்டும். கல்வி எல்லாருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அப்படி நடந்தால் நாட்டின், சமூக பார்வை என அனைத்தும் மாறும் என்று கூறினார்.