வடசென்னை திரைப்படம் மறுவெளியீடு...10,000 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு...
Oct 12, 2023, 18:00 IST
வடசென்னை திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கமலா திரையரங்கு தெரிவித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில் சென்னை கமலா திரையரங்கில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்பட உள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஸ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த காட்சிகளுக்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. ஒரு டிக்கெட் விலை 49 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன