×

‘மாமன்னன்’ டப்பிங்கை தொடங்கிய வடிவேலு... விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள் !

 

 உதயநிதி நடிப்பில் உருவாகும் ‘மாமன்னன்’ படத்தின் டப்பிங்கை நடிகர் வடிவேலு தொடங்கியுள்ளார். 

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு தொடங்கியுள்ளது. டப்பிங் ஸ்டுடியோ ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜூடன் வடிவேலு டப்பிங் கொடுக்கும் தற்போது வெளியாகி அதை உறுதி செய்துள்ளது.