×

“அது அவன் ஊரு, அவன் போகாம வேற யாரு போவா?”- மாரிசெல்வராஜுக்கு ஆதரவாக நடிகர் ‘வடிவேலு’.

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை மிக்ஜாம் புரட்டிபோட்டு சில வாரங்கள் கூட ஆகாத நிலையில் கடும் மழை, வெள்ளம் தென் மாவட்ட மக்களை தாக்கியது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை ஒரு வழியாக்கியது. தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக அமைச்சார் உதயநிதி ஸ்டாலில் அங்கு விரைந்தார். இயக்குநர் மாரிசெல்வராஜும் சம்பவ இடத்தில் இறங்கி மக்களுக்கு பணியாற்றினார்.

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட மாரிசெல்வராஜ், தனது மக்களுக்காக களமிறங்கிய நிலையில். இயக்குநருக்கு அமைச்சருடன் அங்கு என்ன வேலை? அவர் அங்கு என்ன செய்கிறார்? என தொடர்ந்து பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு இயக்குநரே பதிலடி கொடுத்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது மாரிசெல்வராஜுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது “ அது அவன் ஊரு, எங்க பள்ளம் இருக்கு எங்க மக்கள் இருக்காங்கன்னு அவனுக்குதான் தெரியும். அவன் போகாம வேற யாரு போவா? சென்னையை வெள்ளத்தில் செய்த அரசியலை போன்று தென் மாவட்டங்களில் செய்ய முடியவில்லை, அதனால் இயக்குநர் ஏன் அங்க போனான்னு கேக்குறாங்க. உதயநிதி அமைச்சர் அங்க போனதால தான் வேலை சீக்கிரம் நடந்தது. தப்பு தப்பா பேசாதீங்க, குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்.” என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.