×

"கிங்காங்கின் மகள் திருமணம்"-வடிவேலு என்ன செஞ்சார் தெரியுமா ?

 
நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் சமீபத்தில் நடைப்பெற்றது .இந்த கல்யாணத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர் .மேலும் தமிழக முதல்வர் இந்த கல்யாணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .மேலும் வடிவேலுக்கு கிங்காங் கல்யாண பத்திரிகை கொடுத்தும் அவர் கலந்து கொள்ள வில்லை 
இந்நிலையில் வடிவேலுவும் கிங்காங்கும் இணைந்து பல காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக, கந்தசாமி, தெனாலிராமன், சுறா, கச்சேரி ஆரம்பம், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு உள்ளிட்ட படங்களின் நகைச்சுவை காட்சிகள் பெரிய ஹிட் அடித்துள்ளன.
நடிகர் வடிவேலு, கிங்காங் மகள் திருமணத்திற்கு நேரில் வரவில்லை என்றாலும் அவர் செய்த நெகிழ்ச்சிக்குறிய செயல் குறித்து கிங்காங் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், தொலை பேசி வாயிலாக வடிவேலு வாழ்த்து தெரிவித்ததாகவும், முதலமைச்சர் இந்த விழாவில் கலந்து கொண்டது பெரிய விஷயம் என்றும் கூறினார். மேலும், திருமணத்திற்கு வராதவர்களை நினைத்து வருந்த வேண்டாம் என்றும் கூறினாராம். மேலும், வடிவேலு இந்த திருமணத்திற்கு ரூ.1 லட்சம் மொய் வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்.