×

‘மிக்ஜாம்’ பாதிப்பு: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ‘கவிஞர் வைரமுத்து’!...

 

​​​​​​மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

மக்களின் இயல்பு வாழ்கையை சூரையாடிய மிக்ஜாம் புயலால் தலைநகரான சென்னை மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தண்ணீர், உணவு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள், மூத்த குடிமக்களை வைத்திருந்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். அரசும், தனியார் தொண்டு நிறுவங்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து சில பிரபலங்களும் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.

“தண்ணீர் தண்ணீர்

எங்கணும் தண்ணீர்

குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'

எனும் ஆங்கிலக் கவிதை

நினைவின் இடுக்கில் கசிகிறது

வீட்டுக்குத் தண்ணீர் இல்லை

என்பது சிறுதுயரம்

வீட்டுக்குள்ளேயே தண்ணீர்

என்பது பெருந்துயரம்

விடியும் வடியும் என்று

காத்திருந்த

பெருமக்களின் துயரத்தில்

பாதிக்கப்படாத நானும்

பங்கேற்கிறேன்

என் கடமையின் அடையாளமாக

முதலமைச்சரின்

பொது நிவாரண நிதிக்கு

ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்

பொருள்கொண்டோர்

அருள்கூர்க

சக மனிதனின் துயரம்

நம் துயரம்

இடர் தொடராதிருக்க

இனியொரு விதிசெய்வோம்;

அதை எந்தநாளும் காப்போம்”

என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.