×

காமெடியில் கலக்க வரும் ‘வணக்கம்டா மாப்ள’ ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜேஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள காமெடி படம் ‘வணக்கம்டா மாப்ள’. இந்த படத்தில் ஹீரோயினாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இதில் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தை, விரைவில் வெளியிட படக்குழு தீயாய் வேலை பார்த்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை இன்று காலை
 

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் ராஜேஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள காமெடி படம் ‘வணக்கம்டா மாப்ள’. இந்த படத்தில் ஹீரோயினாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இதில் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தை, விரைவில் ‌வெளியிட படக்குழு தீயாய் வேலை பார்த்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை இன்று காலை வெளியிட்டது படக்குழு. ‘வணக்கம்டா மாப்ள’ என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது‌. இதையடுத்து மாலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி ஃப்ர்ஸ்ட லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காமெடியில் கலாட்டாவில் கலக்க வரும் இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் விரைவில் ரீலிசாகிறது.