×

விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகை.. ஷாக்கான ரசிகர்களுக்கு விளக்கம் !

 

நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

தென்னிந்தியாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய், சென்னையிலிருந்து ஐதராபாத் அடிக்கடி சென்று வருகிறார். 

இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்லும் விமானத்தில் நடிகர் விஜய்யுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஐதரபாத்திற்கு செல்ல இவ்வளவு நல்ல விமானம் இதுவரை இருந்ததில்லை. எனக்கு பிடிச்ச தளபதி விஜய்யுடன் இருக்கிறேன். இன்று ரொம்ப நாள் என்று குறிப்பிட்டுள்ளார். 

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகிவிட்டனர். விஜய்யுடன் மீண்டும் வரலட்சுமி நடிகராக என கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் வரலட்சுமி கொடுத்த விளக்கத்திற்கு பிறகே உண்மை என்ன ரசிகர்களுக்கு புரிந்தது.