×

தல தீபாவளி கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார் - வீடியோ வைரல் 

 
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது கணவரோடு தலை தீபாவளி கொண்டாடி உள்ளார். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் சரத்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். சரத்குமாரும் ராதிகாவும் தீபாவளி பரிசுகளை வரலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.