×

பிறந்தநாளில் ‘வாரிசு’ படப்பிடிப்பில் விஜய்.. வைரலாகும் புகைப்படம் !

 

பிறந்தநாளில் ‘வாரிசு’ படப்பிடிப்பில் இயக்குனர் வம்ஷியுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது. 

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் சென்னையில் தொடங்கி மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘வாரிசு’ படப்பிடிப்பில் இயக்குனர் வம்ஷி, இசையமைப்பாளர் தமனுடன் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.