×

சைக்கலாஜிக்கல் த்ரில்லரில் மிரட்டும் 'அஸ்வின்ஸ்'... வசந்த் ரவி பட டீசர் வெளியீடு !

 

வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் 'அஸ்வின்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.  ‌ 

தரமணி, ராக்கி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. அறிமுக இயக்குனர் தருண் தேஜ் இப்படத்ததை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விமலாராமன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப், சிம்ரன் பரீக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் பிரொக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. எட்வின் சகே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைத்தள்ளார். 

இந்நிலையில் வசந்த் ரவி பிறந்தநாளையொட்டி ‘அஸ்வின்ஸ்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு ஆளாகும் யூடியூபர்கள் குழுவைச் சுற்று வருகிறது இந்த படத்தின் கதை. இந்த டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.