×

வசந்த் ரவி நடிக்கும் இந்திரா படத்தின் முதல் தோற்றம் ரிலீஸ் 

 

‘தரமணி’ படத்தின் மூலம் பிரபலமானவர் வசந்த் ரவி. ராக்கி, அஸ்வின்ஸ், ஜெயிலர் உள்ளிட்ட படங்களை நடித்துள்ள அவர், தற்போது தனது 7வது படத்தில் நடிக்கவுள்ளார். ஐரா, நவரசா உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சபரீஷ் நந்தா இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் பிரபலமான அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நடன இயக்குனர் கல்யாண் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில், இப்படத்திற்கு இந்திரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.