‘வீர தீர சூரன்’ படத்தின் 2 வது பாடல் நாளை ரிலீஸ்
Mar 4, 2025, 16:50 IST
விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் 2 வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 ஆவது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.