`வீர தீர சூரன்' பாகம் 1 & 3 நிச்சயம் வெளியாகும் : நடிகர் விக்ரம்
Mar 30, 2025, 18:52 IST
`வீர தீர சூரன் படத்தின் பாகம் 1 & 3 கண்டிப்பாக வெளியாகும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.