×

'வீர தீர சூரன்' படத்தின் புரமோஷன் பணிகள் தொடக்கம்...!

 

வீர தீர சூரன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளது. 


சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வீர தீர சூரன் படக்குழு புரமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளது. இதற்காக நடிகர்கள் விக்ரம், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் இயக்குநர் சு. அருண்குமார் ஆகியோர் நேர்காணல்களை அளித்து வருகின்றனர்.