×

வீரம் படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் ரிலீஸ்...!
 

 

வீரம் திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலரை வெளியிட்டுள்ளனர். 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அடுத்ததாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. <a href=https://youtube.com/embed/TtVGsNw-T-8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/TtVGsNw-T-8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
 
இதற்கிடையே, மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளையொட்டி வீரம் திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித்துடன் தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2014 பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வீரம். இந்த நிலையில், இப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். கடந்த வாரம் சச்சின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.