×

முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாகியுள்ள 'துடிக்கும் கரங்கள்'.. விமல் பட டிரெய்லர் வெளியீடு ! 

 

விமல் நடிப்பில் உருவாகும் 'துடிக்கும் கரங்கள்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.  

விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. வேலுதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மும்பை மாடல் மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரித்து வருகிறார்.

பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களை குறி வைத்து பணம் பறிக்கும் கும்பலை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரில் முழு ஆக்ஷன் ஹீரோவாக விமல் நடித்துள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/8aOMZMimxu8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/8aOMZMimxu8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">