×

பாலியல் வன்கொடுமை குறித்து பேசும் ‘குலசாமி’.. விமல் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

 

 விமலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘குலசாமி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் சரவணசக்தி இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. இந்த படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி, வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விமல் ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாங்கிட் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். 

 

மேலும் இந்த படத்தில் போஸ் வெங்கட், குட்டிப்புலி சரவண சக்தி, வினோதினி, கர்ணராஜா, மகாநதி சங்கர், முத்துப்பாண்டி, ஜெயசூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மகாலிங்கம் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி சங்கரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் அண்ணன் தங்கை பாசம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்த விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/GRH51dIOFJw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/GRH51dIOFJw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">