இயக்குனர் வெங்கட் பிரபுவை பற்றி தளபதி விஜய் என்ன சொன்னார் தெரியுமா..?

இன்று வெளியாகியுள்ள தமிழ் படங்களில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படமும் ஒன்று. இந்த படத்தினை மீசையை முறுக்கு படத்தில் நடித்த நடிகர் அனந்த் இயக்கி நடித்துள்ளார். படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபுவின் தோழி ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் தொடர்பான பேட்டி ஒன்றில், நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து ஐஸ்வர்யா சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், " எனது பிறந்த நாளின்போது தி கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று விஜய் சாரைப் பார்த்தேன். அப்போது அவரிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. விஜய் சாரிடம் வெங்கட் பிரபுவுடன் வேலை செய்வது எப்படி சார் இருக்கின்றது எனக் கேட்டேன். அதற்கு அவர், " செம சிங்க்.. செம சிங்க்.. நான் எப்போதும் ஒரு படத்தில் கமிட் ஆனால் ஒருவருடன் அவ்வளவு எளிதாக சிங்க் ஆகிவிடமாட்டேன். ஆனால் வெங்கட் பிரபுவுடன் சீக்கிரமே சிங்க் ஆகிவிட்டேன். என்னமோ செய்யறான்னு மட்டும் தெரியுது. ஆனால் எப்படினு தெரியல. ஆனால் எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய படமா இருக்கும்னு தோணுது. இரு ஃபேமிலி ஆக்ஷன் எண்டர்டைனர் படமா இருக்கும்" எனக் கூறியதாக ஐஸ்வர்யா கூறினார். ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களையும் வெங்கட் பிரபு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.