×

‘வெங்கட் பிரபு’வுக்கு என்ன ஆச்சு! – இப்படி எலும்பும்  தோலுமாக மாறிட்டாரே!

 

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஜொலித்து வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபுஇவரது சமீபத்திய புகைப்படம் வெளியாகி பலரையும் ஷாக் ஆக வைத்துள்ளது.

வெங்கட் பிரபு தற்போது  நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா, இளையராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.

இந்த நிலையில் யுவன் மற்றும் இளையராஜா இணைந்து எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஷாக் கொடுத்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் பேசுபொருளாகியுள்ளது.  அந்த புகைப்படத்தில், வெங்கட் பிரபு எலும்பும் தோலுமாக மெலிந்து போய் இருக்கிறார். பார்பதற்கே பரிதாபமாக இருக்கிறார்.எப்போதுமே புஷ்டியாக இருக்கக்கூடிய வெங்கட் பிரபு, இதில் ரொம்பவே மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதற்கு முன்னதாக  பிரபல காமெடி நடிகர்  ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து ஒல்லியாக தோற்றமளித்தது குறிப்பிடத்தக்கது.