×

வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘இரவு’.. டீசர் குறித்த புதிய அப்டேட் 

 

 வெற்றி நடிப்பில் உருவாகி வரும் ‘இரவு’ படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வெற்றி. அந்த வகையில் வெற்றியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இரவு’. ‘பக்ரீத்’ படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷீ, கல்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

M10 Productions மற்றும் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். கோஸ்ட் டிராமா திரைப்படமாக உருவாகும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதைக்களத்தை கொண்டது. வீடியோ கேஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதைத்தொடர்ந்து ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களே இப்படம். 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வரும் மே 10-ஆம் தேதி 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.