×

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ படத்திற்கு வந்த சிக்கல்...!
 

 

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படம் தணிக்கை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‘மனுஷி’. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்தது. படத்தின் ட்ரெய்லர் படி, வீட்டிலிருக்கும் ஆண்ட்ரியா காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார். அங்கு அவருக்கு பல்வேறு சித்ரவதைகள் நடக்கின்றன. அவரை நோக்கி தொடர் கேள்விகள் எழுப்படுகின்றன. இதுவே ‘மனுஷி’ படத்தின் களமாக இருக்கிறது.

  <a href=https://youtube.com/embed/iARuxt2olZg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/iARuxt2olZg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
தற்போது இப்படத்தினை தணிக்கைக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இங்குள்ள தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகள், வசனங்கள் நீக்கம் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களும் காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம் என பல்வேறு விஷயங்களை தெரிவித்திருக்கிறார்கள். இறுதியாக, இப்போது தணிக்கைக்கு ஏற்றவகையில் மாற்ற படக்குழு சம்மதம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி விரைவில் காட்சியமைப்புகளை மாற்றி புதிதாக விண்ணப்பிக்க இருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, நாசர், தமிழ், ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘அறம்’ படத்திற்கு பின் கோபி நயினார் இயக்கி இருக்கிறார்.