'விடுதலை 2' இசை வெளியீட்டு விழாவில் டென்ஷனான வெற்றிமாறன்..
கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். அதைத்தொடர்ந்து இவர் ஆடுகளம், விசாரணை, அசுரன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்தது இவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையில் இவர் விடுதலை 2 எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் சூரி கதாநாயகனாக நடிக்க பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று (நவம்பர் 26) சென்னையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகிய பலரும் கலந்து கொண்டனர். அப்போது வெற்றிமாறன், படம் எடுக்கப்பட்டது குறித்தும் படக்குழுவினர் குறித்தும் பேசினார். அதே சமயம் உதவி இயக்குனர்கள், கலை இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என அனைவருக்கும் நன்றி.