‘உதயநிதி’க்கு கரம் கொடுக்கும் இயக்குநர் ‘வெற்றிமாறன்’.
Sep 7, 2023, 19:33 IST
சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என சனாதன மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலினின் கருத்திற்கு ஒரு புறம் ஆதரவும், மறு புறம் எதிர்ப்பும் நிலவி வருகிறது, குறிப்பாக எதிர்கட்சிகள் இணைந்துள்ள ‘இந்தியா’ கூட்டணியில் சலசலப்பு நிலவியது. இந்த நிலையில் உதயநிதியின் கருத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறனும் ஆதரவை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் “ சமத்துவம் என்பது பிறப்பிரிமை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும், அதில் மாற்று கருத்தே கிடையாது, அதை ஏற்காத பட்சத்தில் அதனை எதிர்த்து வீழ்த்துவதே மனிதர்களாகிய நாம் அனைவரின் கடமை. இது குறித்து பேசிய திரு. உதயநிதி அவர்களின் கருத்துடன் ஒத்துப்போகும் அனைவரும் அவருடன் நிற்க வேண்டும். “ என தெரிவித்துள்ளார்.