×

போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’... வெற்றிமாறனின் சூப்பர் அப்டேட்

 

‘விடுதலை’ திரைப்படம் போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

‘அசுரன்’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். முதலில் ஒரு பாகமாக தயாராகி வந்த இந்த படம் தற்போது இரண்டு பாகமாக உருவாகி வருகிறது. 

விஜய் சேதுபதி படத்திற்கு உள்ளே வந்த பிறகு படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டு உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த வெற்றிமாறனிடம் போலீஸ் கதைக்களத்தில் படம் இயக்குவது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த, காவல்துறையில் உள்ள குறைகளை தொடர்ந்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அமைப்பு ரீதியாக ஒடுக்குமுறையை அதிகம் நடத்துவது காவல்துறை என்று கூறினார்.