×

‘ட்ரெயின்’ படத்தில் நடிகராக அறிமுகமாகும் ‘வெற்றிமாறன்’.

 

இயக்குநராக கலக்கிவரும் வெற்றிமாறன் தற்போது நடிகராக அவதாரம் எடுக்க உள்ளார். அது குறித்த சூப்பர் அப்டேட் தற்போது வந்துள்ளது.

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படம் ‘ட்ரெயின்’. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்குகிறார். கிட்டதட்ட 3 ஆண்டுகள் கழித்து மிஸ்கின் நடிப்பிலிருந்து மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளார். இந்த கூட்டணி முதல் முறையாக இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியது.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்த நிலையில் ட்ரெயின் படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. கெஸ்ட் ரோலில் வரும் அந்தக்கதாப்பாத்திரம் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.