×

வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்த நடிகை துஷாரா விஜயன்

 

ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா தகுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது.படத்தின் டப்பிங் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

அண்மையில் வெளியான ராயன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்த துஷாரா விஜயன் வேட்டையன் திரைப்படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில்,  துஷாரா வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் துஷாராவின் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டும் வகையில் அவர் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.