"குறி வைச்சா இரை விழனும்" - இணையத்தில் வைரலாகும் 'வேட்டையன்' ரஜினிகாந்த் டப்பிங்
டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் வேட்டையன் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'வேட்டையன்'. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 'வேட்டையன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.