×

வேட்டையன் அப்டேட் : டப்பிங் பணியை தொடங்கிய ரித்திகா சிங் 

 

'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் , துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஃபகத் ஃபாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். துஷாரா அவரது டப்பிங் பணிகளை சில நாட்களுக்கு முன் முடித்தார். அடுத்ததாக ரித்திகா சிங் அவரது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். அவர் டப்பிங் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  படக்குழு வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.