×

வேட்டையன் படத்தின் புது அப்டேட் நாளை வெளியீடு - என்னவா இருக்கும்?

 

'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் , துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடித்த நடிகர்களில் சிலர் டப்பிங் பேசுவதாக படக்குழு சார்பில் அப்டேட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வேட்டையன் திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.