×

வேட்டையன் Vs கங்குவா.. வெளியானது 'வேட்டையன்' பட ரிலீஸ் தேதி..!
 

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சித்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. ஜெய்பீம் படத்தை இயக்கி பெரிய அளவில் பேசப்பட்ட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இக்கூட்டணிக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என லைகா புரொடக்‌ஷன்ஸ் படக்குழு அறிவித்துள்ளது.