×

அஜித் ரசிகர்களுக்கு குஷி... வெளியானது விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள்!!
 

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடியப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், த்ரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ராஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் போஸ்டர்களை படக்குழு பதிவிட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள சஞ்சய் சாரா மற்றும் சாரதி ஆகியோரின் போஸ்டர்களை பதிவிட்டு உள்ளனர்.