இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விடாமுயற்சி...அஜித் -திரிஷா படங்களை பகிர்ந்த படக்குழு
Dec 17, 2024, 18:45 IST
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
‘மங்காத்தா' திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து 'விடாமுயற்சியில்' நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக 'விடாமுயற்சி' உருவாகியிருக்கிறது.