×

காதல் மனைவியுடன் ரொமாண்டிக் வாக் சென்ற அஜித் - வைரல் வீடியோ

 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்புக்கு சில காலம் இடைவெளி விடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன், மகளுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். ஸ்பெயின் வீதிகளில் அஜித்தும், ஷாலினியும் மகிழ்ச்சியுடன் உலா சென்றுள்ளனர். மேலும் அங்கு நடந்த கால்பந்து போட்டியை மகன் ஆத்விக்குடன் ஷாலினி கண்டு ரசித்தார்.