×

விடுதலை 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியீடு?

 

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் முன்னணி இயக்குநர் வெற்றிமான். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது. இதனால் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அந்த வகையில், ஜெயமோகனின் "துணைவன்" நாவலை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,சேட்டன் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். முதல் பாகம் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்பொழுது விடுதலை பாகம் 2 உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் படம் எப்போது வெளியாகும் என் ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

இந்நிலையில், புத்தக நிலைய திறப்பு விழாவில் பங்கேற்ற வெற்றிமாறன், விடுதலை 2-ம் பாகத்தின் வெளியீடு குறித்து பேசியுள்ளார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.