×

விடுதலை 2  படத்தின் இசை & டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்..

 
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருநதனர். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வருகிற 26 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இளையராஜா இசையில் இந்தப் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.