மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது விடுதலை 2 ட்ரைலர்...!
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘விடுதலை’ முதல் பாகம். இதன் நீட்சியாக இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்,
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு” என விஜய் சேதுபதியின் வசனத்துடன் தொடங்கிறது ட்ரெய்லர். டார்க்காக தொடங்கும் ட்ரெய்லர் அடுத்து காதலை நோக்கி பயணிக்கிறது. மஞ்சு வாரியர் கிராஃப் வெட்டிக் கொண்டும், ஈர்க்கிறார். அவருக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக இளையராஜாவின் இசை இதம்.