×

  விடுதலை 2 படத்தின் முதல் பாடல் 'தினம் தினமும்' அப்டேட்..!

 
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இதைத்தொடர்ந்து 'விடுதலை' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி, எஸ்.ஜே சூர்யா மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்துக்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார். இந்நிலையில் விடுதலை 2 படத்தின் முதல் பாடலான 'தினம் தினமும்' வரும் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.