×

விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படநிறுவனம் வெளியிட்டது.

வித்தியாசமான கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்கியிருந்த திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விடுதலை படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘விடுதலை-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படநிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் சூரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டர்களை வெளியிட்டு, “வீரமும்காதலும்” என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.