"உன் மீதான மரியாதை ஆயிரம் மடங்கு கூடிவிட்டது!" - மாரி செல்வராஜ் குறித்து விக்னேஷ் சிவன் கருத்து..!
Aug 21, 2024, 12:25 IST
இயக்குநர் மாரி செல்வராஜ் 'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து 'வாழை' படத்தை இயக்கியிருக்கிறார். அவரின் தயாரிப்பு நிறுவனமான `Navvi Studios'-யின் முதல் திரைப்படம் இது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முக்கியமான கேரக்டர்களில் ராகுல் மற்றும் பொன்வேல் ஆகிய சிறுவர்கள் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் 'வாழை' படத்தைச் சிறப்புக் காட்சி மூலம் பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் மாரி செல்வராஜைப் பாராட்டி பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.